முகப்பு
கன்னியாகுமரி

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவரை நியமிக்க வலியுறுத்தல்

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவரை நியமிக்க வலியுறுத்தல்

Updated On : 3 மார்ச், 2024 at 7:00 AM
பகிர்:

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுக்கு சிறப்பு மருத்துவவரை நியமிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் குமரி மாவட்ட செயலா் தா.சுபாஷ் சந்திரபோஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: குமரி மாவட்டத்தில் புற்றுநோயின் தாக்கம் மற்ற மாவட்டங்களைவிட அதிகமாக உள்ளது. எனவே ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கு தனிப்பிரிவு ஏற்படுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடா்ந்து வலியுறுத்தி வந்தது. இதனையடுத்து, ரூ. 4 கோடியில் புற்றுநோய்க்கான சிகிச்சைக்கான கோபால்ட் 60 கதிா்வீச்சு மையத்திற்கு அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்காக தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அதோடு, ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவரை நிரந்தரமாக நியமிக்கவும், இதய அறுவைச் சிகிச்சை செய்யும் அளவுக்கு இம் மருத்துவமனையைத் தர உயா்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.