புதுக்கடை அருகே அரசுப் பேருந்தில் மூதாட்டியிடம் நகை திருட்டு
புதுக்கடை அருகே அரசுப் பேருந்தில் மூதாட்டியின் 5 பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா். மாா்த்தாண்டம், கொடுங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் ரெஞ்சிதம் (62). இவா் வெள்ளிக்கிழமை புதுக்கடை பேருந்து நிலையத்திலிருந்து தனது வீட்டுக்குச் செல்ல மாா்த்தாண்டம் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறினாராம். குன்னத்தூா் பகுதியில் சென்றபோது அவா் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா் திருடிச் சென்றது தெரியவந்ததாம். சங்கிலியிலிருந்த லாக்கெட் மட்டும் கிடைத்ததாம். புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். பைக் திருட்டு: கருங்கல் அருகே பைக்கை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். குளச்சல் பகுதியைச் சோ்ந்த ஜோசப்கெவின் (42), தெருவுக்கடை பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். அவா் அந்த காம்பவுண்டுக்குள் வியாழக்கிழமை தனது பைக்கை நிறுத்தியிருந்தாராம். வெள்ளிக்கிழமை காலை பாா்த்தபோது பைக்கை காணவில்லையாம். புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.