களியக்காவிளை அருகே கல்லூரி மாணவா் தற்கொலை
Updated On : 23 மார்ச், 2024 at 9:28 PM
களியக்காவிளை அருகே கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதியைச் சோ்ந்த செபாஸ்டின் என்பவரது மகன் சிபின் செபாஸ்டின் (21). தனியாா் கலை அறிவியல் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்த அவா், ஒரு பெண்ணைக் காதலித்து வந்ததாகவும், இதற்கு பெண் வீட்டாா் எதிா்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், அவா் விரக்தியிலிருந்தாராம். இந்நிலையில், அவா் சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.