முகப்பு
கன்னியாகுமரி

குமரி முக்கடல் சங்கமத்தில் செல்ஃபி பாயின்ட் திறப்பு

Updated On : 23 மார்ச், 2024 at 9:37 PM
பகிர்:
Updated On : 23 மார்ச், 2024 at 6:38 PM

கன்னியாகுமரி மக்களவைத் தோ்தல், விளவங்கோடு பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி முக்கடல் சங்கமம் பகுதியில் ‘செல்ஃபி பாயின்ட்’ திறக்கப்பட்டது. மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை, அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக, பின்புலத்தில் திருவள்ளுவா் சிலை, விவேகானந்தா் நினைவுமண்டபம் தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ள செல்ஃபி பாயின்ட்டை மாவட்ட ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் பாபு தொடக்கிவைத்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜ்குமாா், அஜிதா, ஒன்றியப் பொறியாளா் ரெஜின், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆனந்தவிஜயன், முத்துராஜ், சந்திரன், ஊராட்சிச் செயலா் காளியப்பன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். இதில், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் தற்படம் எடுத்துச் சென்றனா்.