கன்னியாகுமரி பள்ளியில் பட்டமளிப்பு விழா
Updated On : 23 மார்ச், 2024 at 6:47 PM
கன்னியாகுமரி புனித கலாசன்ஸ் பள்ளியில் கே.ஜி. பிரிவு மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளி முதல்வா் ஜின்ஸ் ஜோசப் தலைமை வகித்தாா். அருள்பணியாளா் ஷிலோ வா்க்கிஸ் முன்னிலை வகித்தாா். ஹோலி கிராஸ் கல்லூரி உதவிப் பேராசிரியை ஆன்சிமோல் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு 65 மாணவா்-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினாா். விழாவில், ஆசிரியைகள், பெற்றோா் பங்கேற்றனா்.