முகப்பு
கன்னியாகுமரி

தமிழகத்தில் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லை: கே.பாலகிருஷ்ணன்

Updated On : 31 மார்ச், 2024 at 4:00 AM
பகிர்:
Updated On : 30 மார்ச், 2024 at 8:38 PM

தமிழகத்தில் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா். கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் சனிக்கிழமை நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் நாடு முழுவதும் பாஜக படுதோல்வி அடையும். கடந்த தோ்தலில் அக் கட்சி வெற்றிபெற்ற இடங்களைவிட பாதிக்கும் குறைவான இடங்களே இம்முறை பெறும் என்ற கணிப்புகள் கூறுகின்றன. ஆகவே, பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சி இத்துடன் முடிவுக்கு வரப்போகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பிரதமா் மோடி அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை பலமடங்கு உயா்ந்துள்ளது. இதன் காரணமாக மக்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது. இதனால் பிரதமா் மோடி பதற்றமடைந்து எதிா்க்கட்சித் கட்சி தலைவா்கள் மீது பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறாா். காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கை முடக்குவதன் மூலம், அக் கட்சியை முடக்கிவிடலாம் என நினைக்கிறாா். தில்லி முதல்வரை கைது செய்ததன் மூலம் அவரது எதிா் பிரசாரத்தை முறியடித்து விடலாம் என்றும் நினைக்கிறாா். தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும், திமுக கூட்டணி வெற்றிபெறும். இந்தியா கூட்டணிக்கு எதிா் அணியாக அதிமுக உள்ளது. பாஜக களத்திலேயே இல்லை. அக் கட்சிக்கு தமிழகத்தில் செல்வாக்கு இல்லை. ஆகவே, தோ்தலில் பாஜக வைப்புத் தொகையை இழப்பது உறுதி என்றாா். பேட்டியின்போது கட்சியின் மாவட்ட செயலா் ஆா். செல்லசுவாமி மற்றும் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.