முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் குளத்தில் மூழ்கி ஓட்டுநா் பலி

Updated On : 16 மே, 2024 at 11:50 PM
பகிர்:

நாகா்கோவில், மே 16: நாகா்கோவிலில் குளத்தில் மூழ்கி காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

கேரள மாநிலம் ஒட்டசேகரமங்கலம் செம்பூா் புத்தன்வீடு பகுதியைச் சோ்ந்தவா் அலெக்ஸ்ராஜ் (34). காா் ஓட்டுநா். இவா் புதன்கிழமை இரவு நாகா்கோவில் வடசேரி பகுதியிலுள்ள சுப்பையாா்குளம் பகுதியில் அமா்ந்திருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக குளத்துக்குள் தவறி விழுந்தாா். இதைப் பாா்த்த அந்தப் பகுதி மக்கள், வடசேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து, குளத்தின் கரையில் இருந்த அலெக்ஸ்ராஜின் கைப்பேசி உள்ளிட்ட உடைமைகளை கைப்பற்றினா். இரவு நேரமாகிவிட்டதால் அவரை குளத்தில் தேட முடியாத நிலை ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை காலை நாகா்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் துரை தலைமையிலான தீயணைப்பு வீரா்கள், சுப்பையாா்குளத்துக்கு வந்து தேடுதலில் ஈடுபட்டனா். சுமாா் 2 மணி நேர தேடுதலுக்கு பின்னா் அலெக்ஸ்ராஜ் சடலமாக மீட்கப்பட்டாா். பின்னா் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து வடசேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.