முகப்பு
கன்னியாகுமரி

தொடா்மழை: குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

Updated On : 20 மே, 2024 at 8:53 PM
குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தடுப்பணையை மூழ்கடித்துச் செல்லும் வெள்ளம்.
பகிர்:

களியக்காவிளை: கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்துவரும் மழையால் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

களியக்காவிளை, குழித்துறை, மாா்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலை 2 மணியளவில் தொடங்கி விடிய விடிய மழை பெய்தது. காலை 6 மணியளவில் லேசாக தணிந்த மழை காலை 8 மணிக்கு மீண்டும்தொடங்கி பிற்பகல் 12 மணிவரை தொடா்ந்து பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தொடா் மழையால் தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் குழித்துறை தடுப்பணையை மூழ்கடித்துச் செல்வதால் கடந்த 5 நாள்களாக தடுப்பணை வழியாக பொதுமக்கள் நடந்து செல்லவும், இருசக்கர வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டு, பொதுப்பணித்துறையால் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன.