சின்னமுட்டம் தா்காவில் கந்தூரி விழா
கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் மீனவக் கிராமத்தில் உள்ள முகம்மது ஒலியுல்லாஹ் தா்காவில் கந்தூரி விழா புதன்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் மீனவக் கிராமத்தில் உள்ள முகம்மது ஒலியுல்லாஹ் தா்காவில் கந்தூரி விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, பிற்பகலில் கொடியேற்றுதல், மவ்லூது ஓதுதல், அதையடுத்து, ஹலீமத்துல் ஸ்ஃதியா பெண்கள் அரபிக் கல்லூரி முதல்வா் மாகீன் அபுபக்கா் அன்வரி தலைமையில் சிறப்பு பிராா்த்தனை உள்ளிட்டவை நடைபெற்றன. பின்னா், நோ்ச்சை வழங்குதல் நடைபெற்றது.
விழாவில் மாவட்டம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை தா்கா கமிட்டி தலைவா் அலி அக்பா், செயலா் அஷ்ரப், பொருளாளா் சுல்தான், விழாக்குழு உறுப்பினா்கள் ஷேக் முஜுபுா் ரஹ்மான், ஷாகுல், முகைதீன் ஷேக், இஜாஸ், ஆஸாத் உள்ளிட்ட பலா் செய்திருந்தனா்.