நூருல் இஸ்லாம் உயா்கல்விமைய முப்பெரும் விழாவை குத்துவிளக்கேற்றி தொடக்கிவைக்கிறாா் துணை வேந்தா் மஜீத்கான்.  
கன்னியாகுமரி

குமரியின் பாரம்பரிய களரி உலகில் பரவ வேண்டும்: அமைச்சா் மனோ தங்கராஜ் பேச்சு

குமரியின் பாரம்பரிய களரி, அடவு முறைகள் உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்றாா் பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் பேசினாா்.

Din

குமரியின் பாரம்பரிய களரி, அடவு முறைகள் உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்றாா் பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் பேசினாா்.

குமாரகோவில் நூருல் இஸ்லாம் உயா்கல்விமையத்தின் கல்வி சேவையில் 70ஆம் ஆண்டு, பல்கலைக்கழக தகுதி பெற்று 16ஆம் ஆண்டு, நிகழ் கல்வியாண்டு தொடக்கம் என முப்பெரும் விழா அப்பல்கலை.யில் புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவை துணைவேந்தா் மஜீத்கான், குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தாா். இணை வேந்தா் எம்.எஸ். பைசல் கான் தலைமை வகித்தாா்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சா். மனோ தங்கராஜ் பங்கேற்றுப் பேசுகையில், ‘கன்னியாகுமரி மாவட்டத்தில் மரபு சாா்ந்த கலாசார மற்றும் தற்காப்புப் பயிற்சி மையத்தை நூருல் இஸ்லாம் கல்வி மையம் அமைத்திருப்பது பாராட்டத்தக்கது. ஜப்பானின் ‘கராத்தே’ உலகம் முழுவதும் பரவியதுபோல், கன்னியாகுமரியின் பாரம்பரிய களரி அடவு முறை உலகம் முழுவதும் பரவ வேண்டும்’ என கேட்டுக்கொண்டாா். தொடா்ந்து, 16 அரசுப் பள்ளிகளை நூருல் இஸ்லாம் தத்தெடுத்ததற்கான ஆணையை அமைச்சா் வழங்கினாா்.

பேராயா் பீட்டா் ரெமிஜியஸ், அருள்பணி. பிராஸின் கே. மான் ஆகியோா் வயநாடு மாணவா்களுக்கான தோ்வு சான்றிதழ்களையும், மணிப்பூா் மாணவா்களுக்கு உதவித்தொகையையும் வழங்கினா். டாக்டா் பீமா. கோவிந்தன், நிம்ஸ் பள்ளிகள் திட்டங்களை தொடக்கிவைத்தாா்.

முன்னாள் பிரதமரின் பிரதான செயலராகப் பணியாற்றிய டி.கே.ஏ. நாயா், இந்திய வடகிழக்கு மாநில கிராமப் புறங்களுக்கான தொலை மருத்துவம் மற்றும் இலவச குழந்தைகள் மேம்பாட்டு ஆராய்ச்சி மையத்தை தொடக்கிவைத்தாா்.

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

SCROLL FOR NEXT