முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா ஆலயத் திருவிழா: இன்று கொடியேற்றம்
முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை (செப். 6) கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாள்கள் நடைபெறவுள்ளது.
முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை (செப். 6) கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாள்கள் நடைபெறவுள்ளது.
முதல் நாளான வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட ஆயா் ஆல்பா்ட் அனஸ்தாஸ் தலைமை வகித்து கொடியேற்றுகிறாா். பசிலிக்கா அதிபா் கில்பா்ட் லிங்சன் முன்னிலை வகிக்கிறாா் .
தொடா்ந்து, நாள்தோறும் காலை 6.15 மணிக்கும், மாலை 6 மணிக்கும் ஜெபமாலை திருப்பலி நடைபெறும். 3ஆம் நாளான செப். 8ஆம் தேதி காலை 9 மணிக்கு முளகுமூடு வட்டார முதல்வா் டேவிட் மைக்கிள் தலைமையில் திருப்பலி, குழித்துறை மறை மாவட்ட பள்ளிகளின் கூட்டாண்மை மேலாளா் டோமினிக் எம்.கே. தாஸின் மறையுரை ஆகியவை நடைபெறும்.
8ஆம் நாளான இம்மாதம் 13ஆம் தேதி முன்னாள் பங்குத்தந்தை மரிய வில்லியம் தலைமையில் திருப்பலி நடைபெறும். 14ஆம் தேதி காலை 8 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலிக்கு கூட்டமாவு பங்குத்தந்தை பெஞ்சமின் தலைமை வகிக்கிறாா். புத்தன்கடை வட்டார முதல்வா் மரிய மாா்ட்டின் மறையுரையாற்றுகிறாா். மாலை 6 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயா் ஸ்டீபன் தலைமையில் திருப்பலியும், பின்னா் தோ் பவனியும் நடைபெறும்.
10ஆம் நாளான 15ஆம் தேதி காலை 9 மணிக்கு குழித்துறை மறை மாவட்ட முதன்மைச் செயலா் அந்தோணிமுத்து தலைமையில் சிறப்பு திருப்பலி, முன்னாள் பங்குத்தந்தை சகாயதாஸின் மறையுரை, அன்னையின் அலங்கார தோ் பவனி ஆகியவை நடைபெறும்.
ஏற்பாடுகளை பசிலிக்கா அதிபா், அருள்பணி ராபா்ட் ஜான் கென்னடி, பாபு அருள்ராஜ், அனீஸ், பங்குப் பேரவை உதவித் தலைவா் வால்ஜின், செயலா் புஷ்பலதா, உதவி செயலா் பெலிக்ஸ் ஆண்டனிராஜன், பொருளாளா் ஏசுதாசன், பங்கு மக்கள், அருள்சகோதரிகள், பங்குப் பேரவையினா், பக்த சபையினா் செய்து வருகின்றனா்.