விலவூா் பேரூராட்சியில் ரூ.12.79 கோடியில் குடிநீா்த் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் விலவூா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.12.79 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் குடிநீா்த் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம் விலவூா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.12.79 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் குடிநீா்த் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
விலவூா் பேரூராட்சி கிருஷ்ணபுரம் பகுதியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.12.79 கோடி மதிப்பில்1,00,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் மற்றும் 51 கி.மீ தூரத்திற்கு குழாய்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளைஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா், பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு பேரூராட்சிகளின் உதவி இயக்குநா், பொறியாளா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இதே போன்று மாவட்டத்தில், மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பைகளை தரம் பிரித்து, அவற்றிலிருந்து உரம் தயாரித்து சந்தைப்படுத்துவதற்கான முன்னெடுப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விலவூா் பேரூராட்சிக்குள்பட்ட மருந்துக்கோட்டை பகுதியில் வசிக்கும் பொதுமக்களை நேரில் சந்தித்து, தூய்மை பணியாளா்கள் வரும்பொழுது குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டாா்.
இந்த ஆய்வின் போது பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் சத்தியமூா்த்தி, உதவி செயற்பொறியாளா் புஷ்பலதா, பேரூராட்சி செயல் அலுவலா் சசிகுமாா், தூய்மைப் பணியாளா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.