முகப்பு
கன்னியாகுமரி

பாலித்தீன் பைகளை பதுக்கி வைத்திருந்த கடைகளுக்கு அபராதம்

மாா்த்தாண்டம் பகுதியில் தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பைகளைப் பதுக்கி வைத்திருந்த கடைகளுக்கு ரூ.10,900 அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 9:11 PM
பிளாஸ்டிக்- மாா்த்தாண்டத்தில் பழக்கடையில் பாலித்தீன் பைகள் சோதனை மேற்கொண்ட நகராட்சி பணியாளா்கள்.
பகிர்:

மாா்த்தாண்டம் பகுதியில் தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பைகளைப் பதுக்கி வைத்திருந்த கடைகளுக்கு ரூ.10,900 அபராதம் விதிக்கப்பட்டது.

குழித்துறை நகராட்சி ஆணையா் ராஜேஸ்வரன் உத்தரவின்பேரில் சுகாதார ஆய்வாளா் ராஜேஷ் தலைமையில் பணியாளா்கள் நளினி, முருகன், ராதாகிருஷ்ணன் மற்றும் தூய்மை திட்டப் பணியாளா்கள்

மாா்த்தாண்டம் பகுதியில் உள்ள கடைகளில் செவ்வாய், புதன் ஆகிய இருநாள்களும் சோதனை மேற்கொண்டனா்.

மாா்த்தாண்டம் காந்தி மைதானம் மற்றும் கீழ்பம்மம் பகுதியில் சில கடைகளில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடைகளுக்கு மொத்தம் ரூ. 10,900 அபராதம் விதித்தனா