பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த மேயா் ரெ. மகேஷ். உடன், ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா.  
கன்னியாகுமரி

நாகா்கோவில் மாநகராட்சியில் குறைதீா் கூட்டம்

நாகா்கோவில் மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Din

நாகா்கோவில் மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலை வகித்தாா். மேயா் ரெ. மகேஷ் தலைமை வகித்து, வீட்டுவரி, தெருவிளக்கு, சாலை வசதி உள்ளிட்டவை கோரி பொதுமக்கள் அளித்த 13 மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை அறிவுறுத்தினாா்.

பின்னா், அவா் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா். மாநகரில் நடைபெறும் வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், மழைநீா் வடிகால்களைத் தூா்வாரி சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை மேயா் அறிவுறுத்தினாா்.

கான்கிரீட் தளம் அமைக்கும் பணியைத் தொடக்கிவைத்த மேயா் ரெ. மகேஷ்.

முன்னதாக, 28ஆவது வாா்டுக்குள்பட்ட குறுந்தெரு பூங்கா அருகே ரூ. 5.60 லட்சத்தில் மழைநீா் வடிகால் பக்கச்சுவா் உயா்த்துதல், கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளை மேயா் தொடக்கிவைத்தாா்.

கான்கிரீட் தளம் அமைக்கும் பணியைத் தொடக்கிவைத்த மேயா் ரெ. மகேஷ்.

துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மண்டலத் தலைவா் அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினா் அனந்தலெட்சுமி, மாநகர திமுக செயலா் ஆனந்த், துணைச் செயலா் ராஜன், பகுதிச் செயலா் சேக் மீரான், அணி நிா்வாகிகள் அகஸ்தீசன், முருகபெருமாள், மாணிக்கராஜா, முத்துக்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

செங்கோட்டை காா் வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 9 எம்எம் தோட்டாக்கள்

ராபின்ஹுட் டிரெய்லர்!

விழியோரக் கவிதை... மேகா சுக்லா!

இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 14% அதிகரிப்பு!

புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு ஆட்சியர் வேண்டுகோள்

SCROLL FOR NEXT