பரதநாட்டியப் போட்டியில் வென்றோருக்கு பரிசு
கன்னியாகுமரி கே.கே.ஆா். அகாதெமி பரதநாட்டிய நிலையத்தில் சிறப்பு பயிற்சிப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனா். பரிசளிப்பு விழாவுக்கு அகாதெமி நிறுவனா் ஹெச். ராஜ் தலைமை வகித்தாா். லாரன்ஸ் முன்னிலை வகித்தாா். ராஜாஸ் கல்வி நிறுவன முதல்வா் நளினி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பரிசுகளை வழங்கினாா்.
ஒருங்கிணைப்பாளா் வினிஷா மணிஸ் வரவேற்றாா். முகம்மது ரிஸ்வான் நன்றி கூறினாா்.