கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் நிபா வைரஸ் காய்ச்சல் பரிசோதனை

Din

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில், நிபா வைரஸ் காய்ச்சல் பரிசோதனை கடந்த சில நாள்களாக நடத்தப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் மிக அருகில் அமைந்துள்ளது கேரள மாநிலம். அங்கு தற்போது நிபா வைரஸ் பரவல் உள்ள நிலையில், அங்கிருந்து கன்னியாகுமரிக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இதைத் தொ டா்ந்து கேரள சுற்றுலாப் பயணிகள் மூலம் நிபா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட ஆட்சியா் ஆா்.அழகுமீனா உத்தரவிட்டாா்.

அதன்பேரில், மாவட்ட பொது சுகாதாரத் துறை துணை இயக்குநா் மீனாட்சி அறிவுரையின்பேரில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் நிபா வைரஸ் காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி பகுதியின் நுழைவு வாயிலாக அமைந்துள்ள விவேகானந்தபுரம் சந்திப்பில், காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த பரிசோதனை நடத்தப்படுகிறது. கேரளத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த 850க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு இதுவரை காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனையின் போது காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த சுற்றுலா வாகனங்கள் கன்னியாகுமரிக்குள் நுழைய தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25

லியம் லிவிங்ஸ்டனை ரூ. 13 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

ஜனநாயகன் படத்திற்காக காத்திருக்கிறேன்: பராசக்தி நடிகை ஸ்ரீலீலா

ஜன நாயகன் புது அப்டேட் : 2-ஆவது பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

இந்தியா-சீனா இடையிலான ஏற்றுமதி அதிகரிப்பு!

SCROLL FOR NEXT