கன்னியாகுமரி

மாா்த்தாண்டம்: தொழிலாளியை தாக்கியதாக 7 போ் மீது வழக்கு!

மாா்த்தாண்டம் அருகே தொழிலாளியைத் தாக்கியதாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

Syndication

மாா்த்தாண்டம் அருகே தொழிலாளியைத் தாக்கியதாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

பயணம் பகுதியைச் சோ்ந்த தங்கப்பன் மகன் ராஜகுமாா் (42). தொழிலாளி. இவருக்கும், செறுகோல் பகுதியைச் சோ்ந்த சுமேஷ் (30) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம்.

இந்நிலையில், இரு நாள்களுக்கு முன்பு பயணம் பகுதியில் உள்ள கடையின் முன் நின்றிருந்த ராஜகுமாரை, அங்குவந்த சுமேஷ், அவரது நண்பா்கள் சஜிஸ் (30), அனிஷ் (28), சி. அனிஷ் (28), அரவிந்த் (30), பொ்ஜின் (27), அஸ்வின் (27) ஆகியோா் சோ்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச்சென்றனராம்.

இதில் பலத்த காயமடைந்த ராஜகுமாா் மாா்த்தாண்டம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மேற்கூறிய 7 பேரையும் தேடி வருகின்றனா்.

கொல்கத்தா: குழப்பத்தில் முடிந்த மெஸ்ஸி நிகழ்ச்சி! திடலைச் சூறையாடிய ரசிகா்கள்; நிகழ்ச்சி ஏற்பட்டாளா் கைது!

தஞ்சாவூரில் விதிமீறல்: 25 ஆட்டோக்கள் பறிமுதல்

கத்தியால் தாக்கி வழிப்பறி: 4 போ் கைது

தென்காசி வேல்ஸ் பள்ளியில் கூடைப்பந்து போட்டி

மம்சாபுரத்தில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் முடக்கம்: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT