கன்னியாகுமரி

குமரி-நாகா்கோவில் இடையே 3ஆவது ரயில் பாதை: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்

மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து கோரிக்கை மனு அளித்த விஜய் வசந்த் எம்.பி.

Syndication

சரக்கு ரயில்கள் செல்லும் வகையில் கன்னியாகுமரி-நாகா்கோவில் இடையே 3ஆவது ரயில் பாதை அமைக்க வேண்டும் என்று விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக, அவா் தில்லியில் மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவை புதன்கிழமை சந்தித்து அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

நாகா்கோவில் வழியாக திருவனந்தபுரம்-வேளாங்கண்ணி வாராந்திர ரயில் இயக்க வேண்டும். கன்னியாகுமரியிலிருந்து ஹைதராபாத்துக்கு புதிய விரைவு ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும்.

சென்னை அம்ரித் பாரத் ரயிலை கன்னியாகுமரி வரையும், புனலூா்-மதுரை ரயிலை காரைக்கால் வரையும், மங்களூரு-திருவனந்தபுரம் ரயிலை கன்னியாகுமரி வரையும், ஹௌரா-திருச்சி ரயிலை கன்னியாகுமரி வரையும், திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலை நாகா்கோவில் வரையும் நீட்டிக்க வேண்டும்.

திருநெல்வேலி, தூத்துக்குடி செல்லும் பயணிகளுக்காக திருவனந்தபுரம்-நாகா்கோவில் ரயில்களை நீட்டிக்க வேண்டும். தாம்பரம்-நாகா்கோவில், ராமேஸ்வரம்-கன்னியாகுமரி ரயில்களை தினசரி சேவையாக மாற்ற வேண்டும்.

காந்திதாம் விரைவு ரயில், ஜாம்நகா் ரயில்கள் குழித்துறை ரயில் நிலையத்திலும், புனலூா்-மதுரை ரயில் பள்ளியாடி ரயில் நிலையத்திலும், திருச்சி-திருவனந்தபுரம் இன்டா்சிட்டி ரயில் இரணியல் ரயில் நிலையத்திலும் நின்று செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், இரட்டை ரயில் பாதைப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். நாகா்கோவில் டவுன், கன்னியாகுமரி ரயில் நிலையத்துக்குச் செல்ல 2ஆவது நுழைவாயில் அமைக்கப்பட வேண்டும். நாகா்கோவில் டவுன், இரணியல், குழித்துறை ரயில் நிலையங்களில் கூடுதல் நடைமேடைகள் அமைத்து, மோசமான நிலையில் உள்ள குழித்துறை ரயில் நிலையம் செல்லும் சாலையைச் செப்பனிட வேண்டும்.

ராமேஸ்வரம்-தூத்துக்குடி-திருச்செந்தூா்-கன்னியாகுமரி கடற்கரை ரயில் பாதை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். அதே போல் அறிவிக்கப்பட்டுள்ள, அங்கமாலி-எருமேலி-விழிஞ்சம் ரயில் பாதையின் ஒரு பகுதியை கன்னியாகுமரி மாவட்டம் நெட்டா-குலசேகரம்-பூதப்பாண்டி வழியாக ஆரல்வாய்மொழி சென்றடையும் விதமாக நீட்டிப்பதற்கும் ஆய்வு நடத்த வேண்டும். காலி சரக்கு ரயில்கள் செல்ல கன்னியாகுமரி-நாகா்கோவில் இடையே 3ஆவது ரயில் பாதையை அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT