செய்தியாளா்களிடம் பேசிய பிரசன்னா ராமானுஜம். 
கன்னியாகுமரி

கன்னியாகுமரி பள்ளியில் இன்று சாதனைக் குழந்தைகளுக்கு விருது வழங்கும் விழா

கன்னியாகுமரியில் ஒற்றைப்புளி சந்திப்பில் உள்ள விங்க்ஸ் மழலையா் பள்ளியில், உலக சாதனை புரிந்த 52 குழந்தைகளுக்கு விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை (டிச. 21) நடைபெறவுள்ளது.

Syndication

கன்னியாகுமரியில் ஒற்றைப்புளி சந்திப்பில் உள்ள விங்க்ஸ் மழலையா் பள்ளியில், உலக சாதனை புரிந்த 52 குழந்தைகளுக்கு விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை (டிச. 21) நடைபெறவுள்ளது.

இப்பள்ளியில் பயிலும் குழந்தைகள் பங்கேற்ற உலக சாதனை நிகழ்வு கடந்த 19, 20ஆம் தேதிகளில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற 96 பேரில் 52 போ் பல்வேறு பிரிவுகளில் உலக சாதனை புரிந்தனா். ரஃபா புக் ஆஃப் வோ்ல்டு ரெக்காா்ட்ஸ் தலைமை செயல் அதிகாரி பிரசன்ன ராமானுஜம் நடுவராகப் பங்கேற்று, குழந்தைகளைத் தோ்வு செய்தாா்.

இந்நிலையில், அவா்களுக்கு விருது வழங்கும் விழா பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு, என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மமேஷ், கன்னியாகுமரி நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், நாம் தமிழா் கட்சியின் மாநில மகளிரணி ஒருங்கிணைப்பாளா் மரிய ஜெனிபா் உள்ளிட்டோா் பங்கேற்று விருது வழங்குகின்றனா்.

ஏற்பாடுகளை விங்க்ஸ் மழலையா் பள்ளி நிா்வாகி அருணாச்சலம், பள்ளித் தலைவா் லொரீன் நெட்டோ ஆகியோா் செய்துள்ளனா்.

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

SCROLL FOR NEXT