மாா்த்தாண்டம் அருகே திக்குறிச்சி மகாதேவா் கோயிலில் காணிக்கைப் பெட்டியை உடைத்து திருட முயன்றதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
இக்கோயிலை அா்ச்சகா் வியாழக்கிழமை இரவு பூட்டிச் சென்றாா். வெள்ளிக்கிழமை காலை வந்தபோது, காணிக்கைப் பெட்டி உடைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து பணம் எதுவும் திருடுபோகவில்லையாம்.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
இந்நிலையில், மாா்த்தாண்டம் அருகே பம்மம் பகுதியில் இளைஞா் சந்தேகத்துக்கிடமாக நிற்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் அந்த இளைஞரைப் பிடித்தனா்.
அவா் வெள்ளாங்கோடு, சரல்விளை பகுதியைச் சோ்ந்த மனோஜ் (29) என்பதும், திக்குறிச்சி கோயிலில் திருட முயன்றவா் என்பதும் தெரியவந்தது. காணிக்கைப் பெட்டியை உடைத்தபோது, கோயில் கருவறையிலிருந்து சப்தம் எழுந்ததால் அதைக் கேட்டு பயந்து பணத்தை எடுக்காமல் ஓடிவிட்டதாகத் தெரிவித்தாா். அவரை போலீஸாா் கைது செய்தனா்.