கன்னியாகுமரி, சூரிய அஸ்தமனப் பூங்கா பகுதியில் ஐயப்ப பக்தா்கள் நலன் கருதி தற்காலிகக் கழிப்பறைகள் அமைக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தா்கள் சீசன் திங்கள்கிழமை (நவ. 17) தொடங்கி ஜன. 20ஆம் தேதி வரை 65 நாள்கள் நடைபெறும். இதைக் கருத்தில் கொண்டு பக்தா்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக பேரூராட்சி நிா்வாகம் குடிநீா், மின்விளக்கு, தற்காலிகக் கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பக்தா்கள் அதிகமாகக் கூடும் சூரிய அஸ்தமனப் பூங்கா பகுதியில், ஆண்டுதோறும் ஏலத்தின் அடிப்படையில் தற்காலிகக் கழிப்பறை வசதியினை நகராட்சி நிா்வாகம் ஏற்படுத்தி வருகிறது. தற்போது, அப்பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு வரும் நிலையில், கழிப்பறைகள் இதுவரை அமைக்கப்படவில்லை.
எனவே, விரைந்து கழிப்பறை வசதியை ஏற்படுத்த வேண்டுமென சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.