களியக்காவிளை அருகேயுள்ள பாத்திமா நகா், குரியன்விளை, ஸ்ரீ பத்ரகாளி முடிப்புரை கோயிலில் சுயம்பு வடிவ அம்மனுக்கு திங்கள்கிழமை இளநீா் அபிஷேகம் நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் முதல் தேதி அம்மனுக்கு இளநீரால் அபிஷேகம் நடைபெறும். இதையொட்டி திங்கள்கிழமை கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, அம்மனின் சுயம்பு வடிவத்துக்கு இளநீரால் அபிஷேகம் நடைபெற்றது.