கன்னியாகுமரி

ரூ.26.70 லட்சத்தில் சாலை சீரமைக்கும் பணி தொடக்கம்

Syndication

புதுக்கடை அருகே உள்ள முள்ளுவிளை - மணியாரம்குன்று சாலை ரூ.26.70 லட்சத்தில் சீரமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. கிள்ளியூா் சட்டப்பேரவைத் தொகுதி, பைங்குளம் ஊராட்சிக்குள்பட்ட, முள்ளுவிளை - மணியாரம் குன்று சாலை நீண்ட நாள்களாக பழுதடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்பட்டது.

முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இந்தச் சாலையை சீரமைக்க ரூ. 26.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணியின் தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமாா் தலைமை வகித்து, சாலைப் பணியை தொடங்கி வைத்தாா்.

முன்சிறை கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் ரகுபதி, அம்சி மண்டல தலைவா் ஜாண் றோஸ், நிா்வாகிகள் சாந்தகுமாா், ஹேமகுமாா், ஜாண்சன் உள்ளிட்ட பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.

ஹமாஸ் பாணியில் ட்ரோன், ராக்கெட் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகள்!

எஸ்ஐஆர் படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டுமா? சிறப்பு முகாம் அறிவிப்பு!

நாகை பள்ளிகளுக்கு இன்று விடுமுறையா? ஆட்சியர் விளக்கம்!

தில்லி கார் வெடிப்பு: அல் ஃபலா பல்கலை. உள்பட 24 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 18 மாவட்டங்களில் மழை தொடரும்!

SCROLL FOR NEXT