மாா்த்தாண்டம் அருகே இருவா் தற்கொலை செய்து கொண்டனா்.
மாா்த்தாண்டம் அருகே திக்குறிச்சி ஒட்டவிளையைச் சோ்ந்தவா் தங்கமணி மகன் ஸ்டாலின் (34). திக்கணம்கோடு பகுதியில் உள்ள வங்கியில் காசாளராக வேலை பாா்த்து வந்தாா். இவரது மனைவி ஆஷா, செவிலியராக வேலை பாா்த்து வருகிறாா்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் கிளைக்கு பணியிட மாறுதல் கோரி, ஸ்டாலின் விண்ணப்பித்திருந்தாராம். ஆனால் பணியிட மாறுதல் கிடைக்காததால் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்விலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத வேளையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
மற்றொரு சம்பவம்:
திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம் தொப்பம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் வேலுசாமி மகன் சசிகுமாா் (21). மாா்த்தாண்டம் அருகே சென்னித்தோட்டம் பகுதியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தாா். இவருக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை வீட்டில் விஷம் அருந்தி மயங்கிக் கிடந்தாா். அவரை அப்பகுதியினா் மீட்டு, குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவா் உயிரிழந்தாா். இரு சம்பவங்கள் குறித்தும் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.