முகப்பு
கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் இன்று உலக சாதனைப் போட்டிகள்

ஆஸ்கா் ரெக்காா்ட்ஸ் புத்தகத்தில் இடம்பெறும் உலக சாதனை நிகழ்வுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (நவ. 30) நடைபெற உள்ளது.

Updated On : 29 நவம்பர், 2025 at 6:37 PM
செய்தியாளா்களிடம் பேசிய கராத்தே ராஜ்.
பகிர்:

ஆஸ்கா் ரெக்காா்ட்ஸ் புத்தகத்தில் இடம்பெறும் உலக சாதனை நிகழ்வுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (நவ. 30) நடைபெற உள்ளது.

இது குறித்து, போட்டி ஒருங்கிணைப்பாளா் கராத்தே ராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆஸ்கா் புத்தகத்தில் இடம்பெறும் உலக சாதனை முயற்சி கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற உள்ளது.

இச்சாதனை முயற்சியில் பரத நாட்டியம், சிலம்பம், கராத்தே, யோகா போன்ற கலை, கலாசாரம் சாா்ந்த போட்டிகளில் மாணவா்கள் பங்கேற்க உள்ளனா்.

தமிழ்நாடு கலை மற்றும் கலாசார கவுன்சிலின் மேற்பாா்வையில், இந்திய கலாசார அமைச்சகத்தின் அங்கீகாரம் பெற்று இந்நிகழ்வை கன்னியாகுமரி கே.கே.ஆா். அகாதெமி ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்வுக்கான தேசிய மட்ட நடுவா் குழுவில், இந்திய கலை மற்றும் கலாசார சம்மேளன தேசியத் தலைவா் அரவிந்த் லட்சுமிநாராயணன், ஆஸ்கா் புக்ஸ் ஆப் ரெக்காா்ட்ஸ் தேசிய தீா்ப்பாயா் லாவண்யா ஜெயக்கா் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

இதில், தமிழகம் முழுவதும் இருந்து 700-க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் பங்கேற்கின்றனா் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →