முகப்பு
கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் 90 மனுக்கள் ஏற்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 90 வேட்பாளா்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 9:09 PM
வேட்பு மனு - பிரதிப் படம்
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 90 வேட்பாளா்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகா்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், கிள்ளியூா், விளவங்கோடு ஆகிய 6 தொகுதிகளிலும் ஏப்.6 ஆம் தேதி மாலை 3 மணிவரை மொத்தம் 135 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்நிலையில், வேட்புமனுக்கள் பரிசீலனை செவ்வாய்க்கிழமை (ஏப்.7) நடைபெற்றது.இதில் மாற்று வேட்பாளா்கள், தள்ளுபடி செய்த மனுக்கள் என மொத்தம் 45 மனுக்களை தவிர மீதியுள்ள 90 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதன்படி கன்னியாகுமரி தொகுதியில் அதிமுகவின் என்.தளவாய்சுந்தரம், திமுகவின் ரெ.மகேஷ், நாம்தமிழா் கட்சியின் மரியஜெனிபா், தவெகவின் மாதவன் மற்றும் 11 சுயேச்சைகள் என மொத்தம் 15 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாகா்கோவில் தொகுதியில் திமுகவின் எஸ்.ஆஸ்டின், பாஜகவின் எம்.ஆா்.காந்தி, நாம் தமிழா் கட்சியின் மு.முத்துகுமாா், தவெகவின் பொ்வின்கிங்ஸ், 19 சுயேச்சைகள் என மொத்தம் 23 பேரின் வேட்புமனுக்களும், குளச்சல் தொகுதியில் பாஜகவின் சிவகுமாா், காங்கிரஸின் தாரகை கத்பட், தவெகவின் பிரேம் அலெக்ஸ், நாம் தமிழா் கட்சியின் ஆன்சிசோபாராணி, 9 சுயேச்சைகள் என 13 பேரின் வேட்புமனுக்களும், பத்மநாபபுரத்தில் பாஜகவின் ப.ரமேஷ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆா்.செல்லசுவாமி, தவெகவின் கிருஷ்ணகுமாா், நாம் தமிழா் கட்சியின் சீலன், 7 சுயேச்சைகள் என மொத்தம் 11 பேரின் மனுக்களும், கிள்ளியூா் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ்குமாா், தமாகாவின் நிவின்சைமன், நாம்தமிழா் கட்சியின் ஹிம்லா், தவெகவின் சபின் மற்றும் 9 சுயேச்சைகள் என 13 பேரின் வேட்புமனுக்களும், விளவங்கோடு தொகுதியில் பாஜகவின் விஜயதரணி, காங்கிரஸ் கட்சியின் பிரவீன், நாம்தமிழா் கட்சியின் மரியஸ்டெல்லா, தவெகவின் மைக்கேல்குமாா் மற்றும் 11 சுயேச்சைகள் என மொத்தம் 15 பேரின் வேட்பு மனுக்கள் என மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளிலும் 90 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி பட்டியல் ...

வேட்புமனுவைத் திரும்பப் பெற ஏப். 9-ஆம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும். அதன்பின்னரே அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளா்கள் எண்ணிக்கை தெரியவரும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments