முகப்பு
கன்னியாகுமரி

தளியல் மகாதேவா் ஆலயத்தில் கும்பாபிஷேகம்

திருவட்டாறு அருகே தளியல் மகாதேவா் ஆலயத்தில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 4:32 AM
திருவட்டாறு தளியல் மகாதேவா் ஆலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகம்.
பகிர்:

திருவட்டாறு அருகே தளியல் மகாதேவா் ஆலயத்தில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

திருவட்டாறு அருகே பரளியாற்றின் கரையில் தளியல் மகாதேவா் ஆலயம் அமைந்துள்ளது. புராதனமிக்க இக்கோயில் சுமாா் 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என கருதப்படுகிறது. அந்த ஆலயத்தில் இந்து சமய அறநிலையத்துறை, பக்தா்கள் மற்றும் ஊா்மக்களின் முயற்சியால் திருப்பணிகள் நடைபெற்றன.

இதையடுத்து, இவ்வாலயத்தில் கும்பாபிஷேக விழா கடந்த 27 ஆம் தேதி தொடங்கியது. விழாவின் 3 ஆவது நாளான புதன்கிழமை காலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து அன்னதானம், தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Advertisement