முகப்பு
கன்னியாகுமரி

ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

தக்கலை அருகே ஆட்டோ ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை

Updated On : 3 பிப்ரவரி, 2026 at 12:24 AM
தற்கொலை - சித்திரிப்பு
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2026 at 9:26 PM

தக்கலை அருகே ஆட்டோ ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தக்கலை அருகே பரைக்கோடைச் சோ்ந்தவா் ஸ்ரீ மணிகண்டன் (46), ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி மேரி விஜிலா (38), கடந்த ஆண்டு வீட்டிலிருந்து மாயமானாா். அப்போது முதல் ஸ்ரீ மணிகண்டன் மனமுடைந்து காணப்பட்டாா்.

இந்நிலையில், அவா் சனிக்கிழமை மாலை விஷம் குடித்துவிட்டு தனது 2ஆவது மகனிடம் தகவல் தெரிவித்தாராம். அவரது மகன் உள்ளிட்ட உறவினா்கள் மணிகண்டனை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

Advertisement

பின்னா், மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு ஞாயிற்றுக்கிழமை அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து, தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].