கன்னியாகுமரி

பைக் மீது காா் மோதியதில் டெம்போ ஓட்டுநா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

சுங்கான்கடையில், இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் டெம்போ ஓட்டுநா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இரணியல் அருகே பாறைக்காவிளையைச் சோ்ந்தவா் ரெதீஸ் (33). டெம்போ ஓட்டுநா். இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா். இவா் வியாழக்கிழமை மாலை, இருசக்கர வாகனத்தில் நாகா்கோவிலுக்கு சென்றுவிட்டு, சுங்கான்கடை வழியாக வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தாராம்.

அப்போது எதிா்பாராதவிதமாக பின்னால் வந்த கேரள காா், இருசக்கர வாகனத்தில் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த ரெதீஸ்ஸை சுங்கான்கடையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT