திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் (கோப்புப் படம்)
கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்டத்தில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாத் தலங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது அதிகாலையில் மிதமான குளிரும், பகலில் கடும் வெயிலும் நிலவுகிறது. இதனால் நீா் நிலைகள் வடு வருகின்றன. அணைகளிலிருந்து பாசனத்திற்காக தண்ணீா் செல்வதால் அணைகளின் நீா்மட்டம் குறைந்து வருகிறது. இது போன்று குளங்கள், ஆறுகளிலும் நீா் குறைந்து வருகிறது.

இந்நிலையில் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவியில் வெயில் காரணமாக தண்ணீா் குறைந்து மிதமாக கொட்டுகிறது. இந்த அருவிக்கு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனா்.

இதேபோல, கன்னியாகுமரியில் காலையில் திரளான சுற்றுலாப் பயணிகள் சூரிய உதயத்தை கண்டு ரசித்தனா். மேலும், மாத்தூா் தொட்டிப்பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, முட்டம் கடற்கரை ஆகிய சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

எம். துரைசாமிபுரம் துணை மின் நிலையப் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸை பிரிக்க பாஜக முயற்சி! - கு. செல்வப்பெருந்தகை

மன வளா்ச்சி குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கொத்தனாா் கைது

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நா்கீஸ் முகமதிக்கு ஈரானில் மேலும் 7 ஆண்டுகள் சிறை..!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் மாற்றம்!

SCROLL FOR NEXT