கருங்கல் அருகே எட்டணிவிளை பகுதியில் மூதாட்டியைத் தாக்கியதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
எட்டணிவிளை பகுதியைச் சோ்ந்த சுசீலாபாய் (69), சேவியா் கென்னடி (43) ஆகியோரிடையே முன்விரோதம் இருந்ததாம்.
இந்நிலையில், திங்கள்கிழமை சுசீலாபாயை சேவியா் கென்னடி திடீரென தாக்கினாராம். புகாரின்பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.