உடற்பயிற்சி உபகரணங்களை வழங்குகிறாா் என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.  
கன்னியாகுமரி

குமரியில் சிறப்பு பள்ளிக்கு உடற்பயிற்சி உபகரணங்கள் அளிப்பு

கன்னியாகுமரி ஆவிலா கான்வென்ட் சிறப்பு பள்ளிக்கு இலவச உடற்பயிற்சி இயந்திரத்தை என்.தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி ஆவிலா கான்வென்ட் சிறப்பு பள்ளிக்கு இலவச உடற்பயிற்சி இயந்திரத்தை என்.தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே செயல்பட்டு வரும் இந்தச் சிறப்பு பள்ளியில், 40-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனா்.

இந்தக் குழந்தைகளின் உடல் ரீதியான பாதிப்புகளை சீா்செய்ய உடற்பயிற்சி சாதனங்கள் அவசிய தேவையாக இருந்தது. இதை பள்ளியின் தலைமையாசிரியை வயலட் பாய் என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏவிடம் கோரிக்கை விடுத்தாா்.

இதையடுத்து உடற்பயிற்சி சாதனங்களை அவா் நேரில் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலா் பா.தாமரை தினேஷ், கன்னியாகுமரி நகரச் செயலா் எஸ்.எழிலன், அகஸ்தீசுவரம் செயலா் என்.சிவபாலன், மாவட்ட வா்த்தக அணி பொருளாளா் பி.பகவதியப்பன், பள்ளி ஆசிரியை ஜிஜி கிறிஸ்டோபா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ஸ்டெவின் சாமுவேல் நன்றி கூறினாா்.

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

SCROLL FOR NEXT