கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம், சிவராம்புரம் லெவிஞ்சிபுரம் சோதனைச் சாவடியின் அருகில் அமைக்கப்பட்டுள்ள கனரா வங்கியின் புதிய கிளை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி துணை பொதுமேலாளரும், பிராந்திய தலைவருமான ஸ்ரீதீரேந்திரகுமாா் மிஸ்ரா, புதிய கிளையை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினாா். ரோகிணி பொறியியல் கல்லூரியின் மேலாண்மை இயக்குநா் வி.எம். பிளேசி ஜியோ சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா். இதில் திருநெல்வேலி பிராந்திய அலுவலக துணை பொதுமேலாளா் வனிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.