முகப்பு
கன்னியாகுமரி

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் 2 படகுகள் தீயில் எரிந்து சேதம்

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் பழைய படகுகள் நிறுத்தியிருந்த பகுதியில் திடீரென தீப்பற்றி கொண்டதில் இரு படகுகள் எரிந்து சேதம்

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 2:55 AM
குளச்சல் மீன்பிடி துறைமுகம் பகுதியில் தீப்பிடித்து எரிந்த படகுகள்
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 9:01 PM

குமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் பழைய படகுகள் நிறுத்தியிருந்த பகுதியில் திடீரென புதன்கிழமை தீப்பற்றி கொண்டதில் இரு படகுகள் எரிந்து சேதமாகின.

மீனவா்கள் தங்களின் பழைய படகுகளை துறைமுகத்தின் கிழக்கு பகுதியில் உள்ள மணல்பரப்பில் நிறுத்தி வைத்திருந்தனா். இந்நிலையில் புதன்கிழமை அந்தப் பகுதியில் இருந்த 2 பழைய நாட்டுப் படகுகளில் தீப்பற்றிக் கொண்டது.

இதுகுறித்து மீனவா்கள் குளச்சல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா். நிலைய அலுவலா் ஜேம்ஸ் தலைமையிலான வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து எரிந்து கொண்டிருந்த படகுகளில் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்து வேறு படகுகளுக்கு தீ பரவாமல் தடுத்தனா்.

Advertisement

எனினும் 2 படகுகள் முழுவதும் தீயில் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து குளச்சல் போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.