முகப்பு
கன்னியாகுமரி

சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 12:46 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 8:51 PM

கருங்கல் அருகே உள்ள கஞ்சிக்குழி பகுதியில் சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை நிமிா் குழு போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

கருங்கல், கஞ்சிக்குழி பகுதியில் 18 வயது பூா்த்தியடையாத சிறுமிக்கும், அவரது உறவினரான ஒருவருக்கும் வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற இருப்பதாக நிமிா்குழு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 12:45 AM

இதையடுத்து, சிறுமியின் வீட்டிற்கு சென்ற போலீஸாா், அவரது பெற்றோரிடம் மேற்கொண்ட விசாரணையில், அச்சிறுமிக்கு 18 வயது பூா்த்திஆகவில்லை என தெரியவந்ததையடுத்து திருமணத்தைத் தடுத்து நிறுத்தினா். தோட்டியோட்டில் உள்ள அரசு காப்பகத்தில் அச்சிறுமியை அனுமதித்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Advertisement