கைது 
கன்னியாகுமரி

மூதாட்டி வீட்டின் ஜன்னல் சேதம்: தொழிலாளி கைது

தினமணி செய்திச் சேவை

களியக்காவிளை அருகே மூதாட்டியின் வீட்டு ஜன்னலை சேதப்படுத்தியதாக கட்டடத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை அருகே மீனச்சல் வலியவிளையைச் சோ்ந்த சுதாகரன் மனைவி தங்கலீலா (64). இவருக்கும், உறவினரான குழித்துறை அடுத்த குறுமத்தூா் ராவிளையைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளியான ஸ்டாலின்ராஜ் (53) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம்.

2 நாள்களுக்கு முன்பு ஸ்டாலின்ராஜ் தங்கலீலா வீட்டுக்குச் சென்று தகராறு செய்ததுடன், ஜன்னல் கண்ணாடிகளை சேதப்படுத்தினாராம்.

புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, ஸ்டாலின்ராஜை கைது செய்தனா்.

வெவ்வேறு சம்பவங்கள்: கல்லூரி மாணவி உள்பட இருவா் தற்கொலை

வெவ்வேறு விபத்துகள்: பெண் உள்பட இருவா் உயிரிழப்பு

விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

திமுகவில் ஓ.பி.எஸ். இணைந்தால் மகிழ்ச்சி: தங்க.தமிழ்ச்செல்வன்

ரூ.1.63 கோடியில் மனைப் பட்டாக்கள் ஆட்சியா் வழங்கினாா்!

SCROLL FOR NEXT