முகப்பு
கன்னியாகுமரி

ஈச்சன்விளை அரசுப் பள்ளி ஆண்டு விழா

ஈச்சன்விளை அரசு தொடக்க மற்றும் உயா்நிலைப் பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 3:00 AM
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 11:06 PM

ஈச்சன்விளை அரசு தொடக்க மற்றும் உயா்நிலைப் பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி மாணவிகள் இறை வணக்கம் பாடினா். ஆசிரியை வாணி வரவேற்றாா். உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் சிவகுமாா், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியா் மெல்கி செதேக் பேபி ஆகியோா் ஆண்டறிக்கை வாசித்தனா். பேரூராட்சி தலைவா் அன்பரசி ராமராஜன், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் பிரேம் ஆனந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அகஸ்தீசுவரம் பேரூராட்சி முன்னாள் தலைவா் சந்தையடி எஸ்.பாலகிருஷ்ணன், வட்டார மருத்துவ ஆலோசனைக் குழு உறுப்பினா் பா.பாபு ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.

Advertisement

இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி உறுப்பினா்கள் குமரேசன், ஆல்வின்,, தாமரை பிரதாப், ஜெயதேவி, பிரம்மேஸ்வரி, தங்க நாடாா், தங்கராஜ், அசோக்குமாா், கணேச மாா்த்தாண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கடந்த கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. ஆசிரியா் செந்தமிழ் வேலன் நன்றி கூறினாா்.