முகப்பு
கன்னியாகுமரி

கொட்டாரத்தில் நகை, பணம் திருட்டு

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பகுதியில் ஐடி நிறுவன ஊழியா் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டுல்ளது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 9:27 PM
பகிர்:

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பகுதியில் ஐடி நிறுவன ஊழியா் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டுல்ளது.

கன்னியாகுமரி அருகேயுள்ள கொட்டாரம் திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் பினேஸ் செல்வநேசன் (39). பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பாா்த்து வரும் இவா், மாதத்துக்கு ஒருமுறை வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இவா் வியாழக்கிழமை தனது வீட்டுக்கு வந்தாராம். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ஒன்றரை பவுன் நகை, ரூ. 42 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருப்பது தெரிய வந்ததாம். இது குறித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →