கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே தொழிலாளி தற்கொலை

மாா்த்தாண்டம் அருகே அண்ணன் இறந்த துக்கத்தில் தம்பி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

Syndication

மாா்த்தாண்டம் அருகே அண்ணன் இறந்த துக்கத்தில் தம்பி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள பயந்திக்காலை பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ் (60). தொழிலாளி. இவரது அண்ணன் சில நாள்களுக்கு முன்பு இறந்துவிட்டாா். இதனால் பால்ராஜ் மன வருத்தத்தில் இருந்து வந்தாராம்.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை (ஜன. 1) வீட்டில் தனியாக இருந்த அவா் விஷத்தைக் குடித்து மயங்கி கிடந்தாராம். உறவினா்கள் அவரை மீட்டு கேரள மாநிலம், நெய்யாற்றின்கரை பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது மகன் விஜூ அளித்த புகாரின் பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

SCROLL FOR NEXT