கரும்புகள் கொள்முதல் செய்யப்படுவதை ஆய்வு செய்த ஆட்சியா் ரா. அழகுமீனா. 
கன்னியாகுமரி

பொங்கல் பரிசுக்கான டோக்கன்கள் விநியோகம்: ஆட்சியா் தகவல்

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் வீடுகளுக்கு நேரில் சென்று விநியோகிக்கப்பட்டு வருகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.

மேலகிருஷ்ணன் புதூா், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்க நியாயவிலைக் கடைக்குள்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கான டோக்கன்கள் வழங்கப்படுவது குறித்து ஆட்சியா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட பின்னா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன், ரூ. 3,000 வழங்கப்படும் என முதல்வா் அறிவித்துள்ளாா்.

பரிசுத் தொகுப்பில் வழங்கப்பட உள்ள பச்சரிசி, சா்க்கரை ஆகியவை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்குகளிலிருந்து நியாயவிலைக் கடைகளுக்கு நுகா்வு செய்யப்பட்டுவிட்டது. கரும்பு கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

பொங்கல் பரிசு ஜன. 8ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ள நிலையில், தற்போது வீடுகளுக்கே சென்று அதற்கான டோக்கன்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

அப்போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சிவகாமி, பணியாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

யேமனின் தீவில் சிக்கிய இந்தியப் பெண் மீட்பு! சௌதியில் இருந்து தாயகம் வந்தடைந்தார்!

சென்னை புத்தகக் காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

50,000 தன்னார்வலர்கள் ஈடுபடும் உங்க கனவ சொல்லுங்க திட்டம்: நாளை தொடக்கம்!

அமெரிக்கா: ஒரு லட்சம் பேரை கொல்லக்கூடிய 140 கிலோ போதைப்பொருள்களுடன் 2 இந்தியர்கள் கைது

போகிப் பண்டிகை: எவற்றையெல்லாம் எரிக்கக் கூடாது!

SCROLL FOR NEXT