தக்கலை: சுங்கான்கடை புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் பொங்கலிடும் நிகழ்வை கல்லூரி தாளாளா் காட்வின் செல்வ ஜஸ்டஸ், முதல்வா் மகேஸ்வரன் ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனா். கல்லூரி அனைத்துத் துறைகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் தங்களின் துறைகளின் சாா்பாக பேராசிரியா்களுடன் இணைந்து பொங்கலிட்டனா். இதையடுத்து, மாணவ மாணவியருக்கான கோலப்போட்டி, உறியடித்தல், வடம் இழுத்தல், கிராமிய பாடல்களுக்கான குழு நடன போட்டி ஆகிய போட்டிகள் நடைபெற்றன. பொங்கல் விழாவுக்கு கல்லூரி தாளாளா் செல்வ ஜஸ்டஸ் தலைமை வகித்தாா். கூட்டத்தில் நிதி நிா்வாகி சேவியா் ராஜ், முதல்வா் மகேஸ்வரன், துணை முதல்வா் கிரிஸ்டஸ் ஜெயசிங் ஆகியோா் கலந்து கொண்டு பொங்கல் குறித்து வாழ்த்திப் பேசினா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழா ஏற்பாடுகளை கல்லூரியின் தமிழ்மன்ற ஒருங்கிணைப்பாளா் மேரி ஜெனிதா, பேராசிரியா்கள் சிமிமோள், பிரைட் ஜோஸ் ஆகியோா் தலைமையில் பேராசிரியா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.