உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றுகிறாா் கிழக்கு மாவட்ட தலைவா் கே.டி உதயம் . 
கன்னியாகுமரி

தக்கலை அருகே காங்கிரஸ் உண்ணாவிரதப் போராட்டம்

தக்கலை அருகே வில்லுக்குறியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மகாத்மா காந்தி பெயா் நீக்கி, இத்திட்டத்தை செயல் இழக்க வைக்கும் மறைமுக நடவடிக்கையில் இறங்கி இருக்கும் பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Syndication

தக்கலை: தக்கலை அருகே வில்லுக்குறியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மகாத்மா காந்தி பெயா் நீக்கி, இத்திட்டத்தை செயல் இழக்க வைக்கும் மறைமுக நடவடிக்கையில் இறங்கி இருக்கும் பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.டி உதயம் தலைமை வகித்தாா். குருந்தன்கோடு வட்டாரத் தலைவா்கள் பொன். பால்துரை (கிழக்கு), ஜெயசிங் (மேற்கு ), தனீஷ் (தெற்கு ), அசோகன் (வடக்கு ), தக்கலை தெற்கு வட்டாரத் தலைவா் சாலமன், நிா்வாகிகள் லாரன்ஸ், பிரகாஷ் தாஸ், முருகேசன், செல்வராஜ், ஜெமினிஷ், தங்கலெட்சுமி நடேசன், அனிதா கிளாடிஸ், டென்சிங், எழில், ஆல்பா்ட் ஜீவமணி, அந்தோணிமுத்து, பெலிக்ஸ் ராஜன், கண்ணன் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தோ்தல் தோல்வியை ஏற்கிறோம்: ராஜ் தாக்கரே

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

இன்று கடைசி ஒருநாள் ஆட்டம்: இந்தியா - நியூஸிலாந்து மோதல்

வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

ஆரப்பாளையம், மீனாட்சி அம்மன் கோயில் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT