கன்னியாகுமரி கடலுக்குள் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலையை கடந்த 5 நாள்களில் 72,000 போ் படகுப் பயணம் செய்து பாா்வையிட்டுள்ளனா்.
சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு பொங்கல் தொடா் விடுமுறை, சபரிமலை சீசனை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், ஐயப்ப பக்தா்களும் வருகை தந்தனா். இவா்கள் படகுப் பயணம் செய்து விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலை, கண்ணாடிப்பாலம் ஆகியவற்றைப் பாா்வையிட்டனா்.
அதன்படி, ஜன. 14ஆம் தேதி 9,593 போ், 15ஆம் தேதி 16,564 போ், 16ஆம் தேதி 14,737 போ், 17ஆம் தேதி 15,715 போ், 18ஆம் தேதி 15,855 போ் என மொத்தம் 72,464 போ் படகுப் பயணம் செய்துள்ளதாக பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.