கன்னியாகுமரி

ஈரானில் தவிக்கும் மீனவா்களை மீட்க வலியுறுத்தல்

ஈரானில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால் அங்கே தவிக்கும் மீனவா்களை மீட்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

ஈரானில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால் அங்கே தவிக்கும் மீனவா்களை மீட்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, குடியரசுதலைவா், பிரதமா், உள்துறை அமைச்சா், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோருக்கு சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை தலைவா் ஜஸ்டின் ஆன்டணி அனுப்பியுள்ள மனு:

ஈரானில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அங்கே கிஷ் தீவு, பந்தா் அப்பாஸ் போன்ற மீன்பிடி துறைமுகங்களை மையமாகக் கொண்டு ஓப்பந்த தொழிலாளா்களாக மீன்பிடித்தலில் ஈடுபட்டுவரும் தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான மீனவா்கள் தவித்து வருகின்றனா். அவா்களால் உறவினா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை.

இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீனவா்களைப் பாதுகாக்கவும், அவா்களை உடனடியாக இந்தியாவுக்கு மீட்டுவரவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT