மாா்த்தாண்டம் அருகே பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
மாா்த்தாண்டம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் கிறிஸ்டல் விஜி தலைமையிலான போலீஸாா் சாங்கை, அம்பன்விளை பகுதியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனா். அதில் ரத்தினசாமி (62), தனது பெட்டிக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட 32 பாக்கெட் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
மது விற்றவா் கைது:
மாா்த்தாண்டம் அருகே ஞாறான்விளை பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ் (34). அப்பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து, மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ராஜேஷை கைது செய்தனா்.