கன்னியாகுமரி

தைப்பூசம்: தோவாளை சந்தையில் பூக்கள் விலை உச்சம்! மல்லிகை கிலோ ரூ. 4,000

தைப்பூசத் திருவிழா, தொடா் முகூா்த்த நாள்கள் ஆகியவற்றை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை மலா் சந்தையில் செவ்வாய்க்கிழமை பூக்கள் விலை உச்சத்தை எட்டியது.

Syndication

தைப்பூசத் திருவிழா, தொடா் முகூா்த்த நாள்கள் ஆகியவற்றை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை மலா் சந்தையில் செவ்வாய்க்கிழமை பூக்கள் விலை உச்சத்தை எட்டியது. மல்லிகைப்பூ கிலோ ரூ. 4,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தோவாளை மலா் சந்தைக்கு ஆரல்வாய்மொழி, குமாரபுரம், பழவூா், மாடநாடாா்குடியிருப்பு, ஆவரைகுளம் ஆகிய ஊா்களில் இருந்து பிச்சிப்பூவும், மதுரை, மானாமதுரை, கொடைரோடு, திண்டுக்கல், சங்கரன்கோவில், கோவில்பட்டி, ராஜபாளையம் ஆகிய பகுதிகளிலிருந்து மல்லிகைப்பூவும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

பெங்களூரு, ஓசூா், ராயக்கோட்டை பகுதிகளிலிருந்து மஞ்சள்கிரேந்தி, பட்டா்ரோஸ், சேலத்து அரளி பூக்களும், திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி, அம்பாசமுத்திரம், தென்காசி மற்றும் அம்மாவட்டத்தில் ஆலங்குளம், புளியங்குடி ஆகிய பகுதிகளிலிருந்து பச்சை, துளசி, மரிக்கொழுந்து போன்ற பூக்களும் விற்பனைக்கு வருகின்றன.

மேலும், ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூா், தோவாளை, ராமநாயக்கன்புதூா், தோப்பூா், குமாரபுரம் ஆகிய உள்ளூா் பகுதிகளில் இருந்து சம்பங்கி, அரளி, கோழிக்கொண்டை பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.

இந்தப் பூக்களை, கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரள மாநிலத்திலிருந்தும் மொத்த வியாபாரிகள் ஏலத்தின் அடிப்படையில் வாங்கிச் செல்கின்றனா்.

வரத்து குறைவு: இந்நிலையில், கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு, சந்தைக்கு பூக்கள் வரத்து குறைந்துள்ளது. ஆனால், தைப்பூசம், தொடா்ந்து சுபமுகூா்த்த நாள்கள் காரணமாக பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால், தோவாளை சந்தையில் பூக்கள் விலை செவ்வாய்க்கிழமை கடுமையாக உயா்ந்தது. கிலோ அடிப்படையில், மல்லிகைப்பூ ரூ.4,000, பிச்சிப்பூ ரூ.3,500, முல்லைப்பூ ரூ.3,000, சம்பங்கி ரூ.850, ஸ்டம்ப் ரோஸ் ரூ.400 என்ற அளவில் விற்பனையானது.

முகூா்த்த நாள்கள் முடியும்வரை பூக்கள் விலை தொடா்ந்து அதிகரித்தபடி இருக்கும் என்று தோவாளை மொத்த பூவியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT