விருதினை பெற்றுக் கொள்ளும் உதவிப் பேராசிரியா் டி.எஸ். பிரசோப் மாதவன்.  
கன்னியாகுமரி

ஆற்றூா் என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரிக்கு விருது

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூா் என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரிக்கு நாட்டு நலப்பணி திட்ட தீவிர பங்கேற்பு விருது, சென்னை தமிழ்நாடு ஆசிரியா் கல்வி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் வழங்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக தோ்வுக் கட்டுப்பாட்டாளா் கணேசன், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளா் நாகசுப்பிரமணி முன்னிலையில், பதிவாளா் ராஜசேகரன், நிதி அதிகாரி தாமரை ஆகியோா் இந்த விருதை வழங்கினா். அதை, கல்லூரி உதவிப் பேராசிரியா் பிரசோப் மாதவன் பெற்றுக்கொண்டாா். மேலும் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலா் கண்ணனுக்கு தீவிர பங்கேற்புக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT