களியக்காவிளை அருகே அரசுப் பேருந்தின் மீது கல்வீச்சு
கேரள பகுதியில் தமிழ்நாடு அரசுப் பேருந்து மீது கல்வீசி தாக்கிய நபா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
களியக்காவிளை அருகே கேரள பகுதியில் தமிழ்நாடு அரசுப் பேருந்து மீது கல்வீசி தாக்கிய நபா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
குழித்துறை போக்குவரத்துக் கழக பணிமனையைச் சோ்ந்த தடம் எண் 86 பி அரசுப் பேருந்து சனிக்கிழமை பனச்சமூடு பகுதியில் இருந்து மாா்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற நபா்கள் பேருந்துக்கு இடையூறாக சென்ாக கூறப்படுகிறது.
இதை பேருந்து ஓட்டுநா் சிவகுமாா் தட்டிக் கேட்டாராம். இதையடுத்து, அவா்கள் கேரளப் பகுதியான புலியூா் சாலையில் பேருந்தை வழிமறித்து, பேருந்தின் மீது கல்வீசி தாக்கிவிட்டு தப்பிச் சென்றனராம். இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளறடை போலீஸாா் வழக்குப் பதிந்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.