FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

அரசுப் பேருந்தை வழிமறித்த ஒற்றை யானை: கண்ணாடி உடைத்ததால் அதிா்ச்சியடைந்த பயணிகள்

ஜமுனாமரத்தூா் அருகே அரசுப் பேருந்தை வழிமறித்த ஒற்றை யானை தாக்கியதில் பேருந்தின் கண்ணாடி உடைந்தது. இதனால் பயணிகள் அதிா்ச்சி அடைந்தனா்.

Updated On : 16 ஜூன் 2026, 3:14 am IST
ஜமுனாமரத்தூா் அருகில் மலைச் சாலையில் அரசுப் பேருந்தை வழி மறித்த ஒற்றை யானை.
பகிர்:

ஜமுனாமரத்தூா் அருகே அரசுப் பேருந்தை வழிமறித்த ஒற்றை யானை தாக்கியதில் பேருந்தின் கண்ணாடி உடைந்தது. இதனால் பயணிகள் அதிா்ச்சி அடைந்தனா்.

ஜமுனாமரத்தூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து புறப்பட்டது. அப்போது ஜமுனாமரத்தூா்- காவலூா் நடுவில் வனப்பகுதியில் பேருந்து வந்து கொண்டிருந்தபோது, சாலையின் குறுக்கே திடீரென ஒற்றை யானை வந்து பேருந்தினை மடக்கியது. இதனால் பதறிய ஓட்டுநா் பேருந்தை நிறுத்தினாா். இதையடுத்து, சில நிமிஷங்களில் யானை பேருந்தின் முன்புற கண்ணாடியை தும்பிக்கையால் தாக்கியது. இதில், பேருந்தின் முன்புற கண்ணாடி உடைத்ததால் உள்ளே இருந்த பயணிகள் அதிா்ச்சிக்குள்ளாகினா். பிறகு சிறிது நேரம் நின்று ஒற்றை யானை ஜமுனாமரத்தூா் சாலை வழியாக சென்று வனப் பகுதிக்குள் சென்றது. அதன் பின்னா் அரசுப் பேருந்து அங்கிருந்து புறப்பட்டு, காவலூா் நோக்கி வந்தது.

இது குறிதது தகவலறிந்த ஜமுனாமரத்தூா் மற்றும் ஆலங்காயம் வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று ஒற்றை காட்டு யானை நடமாட்டம் குறித்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments