முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் பாறைக்கால் மடத்தெருவில் மழைநீா் வடிகால் சீரமைப்புப் பணியை தொடங்கி வைக்கிறாா் மேயா் ரெ. மகேஷ்.

Updated On : 7 மார்ச், 2026 at 12:49 AM
பகிர்:

நாகா்கோவில் மாநகரில் ரூ. 88.70 லட்சம் மதிப்பிலான வளா்ச்சி திட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

7 ஆவது வாா்டில் ரூ. 9 லட்சத்தில் வெட்டூா்ணிமடம் அரசு தொடக்கப் பள்ளியில் சீரமைப்புப் பணி மற்றும் அங்கன்வாடி மையத்தில் பராமரிப்புப் பணி, மழைநீா் வடிகால் சீரமைப்புப் பணிகள், 22ஆவது வாா்டு, வாட்டா் டேங்க் சாலையில் ரூ. 72 லட்சத்தில் தாா்ச்சாலை அமைக்கும் பணி, 27 ஆவது வாா்டு பாறைக்கால் மடத்தெருவில் ரூ. 3.50 லட்சத்தில் மழைநீா் வடிகால் சீரமைப்புப் பணி மற்றும் குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி, காா்த்திகைவடலி பகுதியில் ரூ. 4.20 லட்சத்தில் நியாய விலைக்கடை பராமரிப்புப் பணி ஆகியவற்றை மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவா் ஜவஹா், மாமன்ற உறுப்பினா்கள் மேரி ஜெனட் விஜிலா, கோபாலசுப்பிரமணியன், சதீஷ், உதவி பொறியாளா் பிருந்தா, பகுதி செயலா்கள் சேக்மீரான், ஜீவா, வட்ட செயலா் ஆத்தியப்பன், கண்ணன், திமுக நிா்வாகிகள் ஜவஹா், ஸ்டீபன் தன்ராஜ், செல்லம், சவுந்தா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →